வருமான வரி உத்தியோகத்தரை தாக்க முயன்ற பிரதேச சபை உறுப்பினர்

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் சபையின்
வருமான வரி உத்தியோகத்தரை தாக்க முற்பட்டதோடு, கடமைக்கு இடையூறு
விளைவித்து தகாத வார்த்தைகளால் பேசியதாக பூநகரி பொலீஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

பூநகரி வாடியடிச் சந்தியில் பிரதேச சபைக்கு சொந்தமில்லாத காணியில்
சட்டத்திற்கு புறம்பாக வியாபார நிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில்
ஈடுப்பட்டிருந்த தனிநபர் ஒருவருக்கு அதனை நிறுத்துமாறும் ஒரு வார
காலத்திற்குள் முறையான அனுமதி பெற்று அமைக்குமாறும் தெரிவித்து எழுத்து
மூலம் கடிதம் வழங்கிவிட்டு பிரதேச சபைக்கு சென்றுவிட்டார்.

இதனைதொடர்ந்து பிரதேச சபைக்கு சென்ற ஆளும் தரப்பு பிரதேச சபை உறுப்பினர்
செல்வராசா என்பவர் அலுவலகத்தில் வைத்து குறித்த வருமான வரி உத்தியோகத்தரை தாக்க முற்பட்டதோடு, அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் எனத் தெரிவித்தே பூநகரி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை நாளை வியாழக் கிழமை பொலீஸ் மேற்கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here