மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொற்று 5,000ஐ கடந்தது!

நாட்டில் இன்று இதுவரையான காலப்பகுதியில் 293 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.

இதன்மூலம் இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8,706 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில், மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்ட 291 பேரும், தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ள 2 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன், மினுவாங்கொட-பேலியනகாட கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடந்து, இப்போது 5,232 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 110 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,043 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 13 வெளிநாட்டினர் உட்பட 4,644 பேர், நாடு முழுவதுமுள்ள 34 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 445 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here