அச்சுவேலி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! (PHOTOS)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த காரென்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

இராச வீதி ஊடாக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் வாகனத்தின் சாரதி தனபாலசிங்கம் லஷ்ச தீபன் (வயது 34) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

அவருடன் பயணம் செய்த சிவன் சரல தீபன்(23) பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவர் வசாவிளான் பகுதியை சேர்ந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here