மஸ்கெலியாவில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா,சாமிமலை நகரங்களிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவி கோவிந்தன் செண்பகவள்ளி தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் கங்கேவத்த பிரிவில் உள்ள 41 வயதுடைய நபர் ஒருவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்தவர். இவர் கடந்த 17 ஆம் திகதி மஸ்கெலியா கங்கேவத்த பிரிவில் உள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் அவ்வாறு வரும் வழியில் மஸ்கெலியா நகரில் பல இடங்களுக்கு சென்றுள்ள நிலையில் அவர் மீண்டும் திரும்பி போலியகொடை சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் கடந்த 23ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவருடைய மனைவிக்கு நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கமைவாக அவருக்கு இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மஸ்கெலியா மற்றும் சாமிமலை வர்த்தக சங்கத்தினர் என்னிடம் மனு ஒன்றை கொடுத்து கேட்டுக்கொண்டதற்கிணங்க மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று (27) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என்றார்.

-தலவாக்கலை பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here