கம்பளையில் நாய்களிற்கு உணவளிப்பவர்!

கண்டி மாவட்டம் கம்பளை நகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள தெரு நாய்களிற்கு தினமும் தேடிச் சென்று உணவளித்து வருகிறார் ஒருவர்.

பெயர் குறிப்பிட விரும்பாத இவர் நாளாந்தம் அதிகாலை நித்திரை விட்டு எழுந்து குடும்பத்தாரின் உதவியுடன் நாய்களுக்காக சமைத்து தனது முச்சக்கர வண்டி மூலம் நாய்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றார்.

தினமும் குறித்த நேரத்திற்கு நாய்களுகான உணவுகள் வழங்கப்படுவதினால், நாய்கள் சரியான நேரத்திற்கு சரியான இடத்தில் ஒன்றாக வந்து நின்று தங்கள் உணவுகளை பெற்றுக் கொள்கின்றன.

சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு உணவளிக்க பயன்படும் பொலித்தீன்களையும்  உடனே எடுத்து செல்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here