ஐ.பி.சி பணம் கொடுத்து வாங்க முற்பட்ட 3 மாகாணசபை ஆசனங்களையும் தமிழ் அரசு கட்சி வழங்காது!

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் 3 வேட்பாளர்களை களமிறக்கும் ஐ.பி.சி நிறுவனத்தின் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரித்தானியாவை தளமாக கொண்ட ஐ.பி.சி நிறுவனம் கடந்த பொதுத்தேர்தலில் பெரும்தொகை பணத்தை செலவிட்டு, அரசியலில் தனக்கு சார்பான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயன்றது.

எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன் ஆகியோரை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. விடுதலைப் புலிகள் தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு எதிராக பிரமுகர்கள் சிலரை அறிக்கை விட வைக்க முயன்றது.

யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனல்ட் அப்போது அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதன் பின்னணியில் ஐ.பி.சி நிறுவனமிருந்தது. ஆனல்ட்டின் பிரச்சார நடவடிக்கைக்கு உதவுதல், ஒரு தொகை பிரச்சார நிதி வழங்கலாமென உத்தரவாதமளித்திருந்தனர்.

இது குறித்து பின்னர் எம்.ஏ.சுமந்திரனிடம் ஆனல்ட் சந்தித்து மன்னிப்பு கோரியிருந்தார்.

அதேவேளை, கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் 3 ஆசனங்களை தருமாறு, சி.சிறிதரனை ஐ.பி.சி பிரதிநிதிகள் அணுகியிருந்தனர். எனினும், கிளிநொச்சியில் அதிகமானவர்கள் காத்திருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, மாவை சேனாதிராசாவை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இதற்கு சம்மதிக்கும் பட்சத்தில் கட்சியின் பிரச்சார செலவிற்காக ஒரு தொகை நிதி வழங்கவும் ஐ.பி.சி தயாராக இருந்தது.

தமது, தரப்பில் பேஸ்புக்கில் வீடியோக்கள் வெளியிடும் உமாகரன் என்பரையும், இன்னும் இருவரையும் களமிறக்க வேண்டும் என்றும், அதற்காக நீண்டகாலமாக அவர்களை தயார்படுத்தி வந்துள்ளதாகவும் ஐ.பி.சி கேட்டது.

எனினும், தற்போதைய நிலையில்  ஐ.பி.சியின் கோரிக்கை நிறைவேற்றப்பட வாய்ப்பில்லையென்றே தெரிய வருகிறது. பணம் கொடுத்து ஆசனம் வாங்கும் மோசமான கலாச்சாரத்தை தமிழ் அரசியலிலும் வளர்க்க கூடாது என கட்சியின் உயர்மட்ட கலந்துரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்மைய நாட்களில் நடந்த கலந்துரையாடல்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here