கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விசேட முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடைய அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தானுடைய பங்குபற்றலோடு இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட செயலக கணக்காளர் மற்றும் மாவட்ட செயலகத்தின் உயர்பதவிநிலை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த கலந்துரையாடல் இடம் பெற்று வருகின்றது.

இந்த கலந்துரையாடலில் குறித்த திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது அல்லது அதற்காக மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here