கடலில் கல்லெறிந்த இலங்கை கடற்படை: இந்திய மீனவர் காயம்!

இந்தியப் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர் மீது இலங்கை கடற்படை கற்களை கொண்டு தாக்கியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய ஊடக செய்திகளின்படி,

மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ராமேஸ்வரம் துறை முகத்தில் சுமார் 800 விசைபடகுகள் உள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை 400க்கும் குறைவான விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் தனுஸ்கோடி ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதனால் பல இலட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்காமல் இரவோடு இரவாக கரை திரும்பினர்.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(27) அதிகாலை மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களை வீசி எறிந்து மீண்டும் இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பூண்டி ராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர் சுரேஸ் என்பவருக்கு இலங்கை கடற்படை வீசிய கற்கள் பட்டதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் மீன் பிடித்த கொண்டிருந்த மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரை திரும்பினர்.

இதனால் படகு ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையின் தாக்குதலில் காயமடைந்த மீனவர் சுரேஸ் பாதுகாப்பு வட்டாரங்களுக்கு அஞ்சி அதி காலையில் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீடுக்கு திரும்பி உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here