பதுங்கிய இளைஞன்; துவைத்து எடுத்த பொலிசார்: அதிர்ச்சி வீடியோ!

இளைஞன் ஒருவரை பொலிசார் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

24 அக்டோபர் 2020 என வீடியோவில் திகதி தோன்றுகிறது. எனினும், அந்த வீடியோ எடுக்கப்பட்ட பிரதேசம் பற்றிய தகவல் எதுவும் இல்லை.

அனேகமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாமென கருதப்படுகிறது.

முச்சக்கர வண்டியில் சில இளைஞர்கள் இருப்பதையும், அந்த இடத்திற்கு பொலிசார் திடீரென வருவதையும், பொலிசாரை கண்டதும் இளைஞர்கள் தப்பியோடுவதையும், ஒருவரை பிடித்து பொலிசார் தடியொன்றினால் தாக்குவதையும் வீடியோ காண்பிக்கிறது.

அந்த இளைஞனை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலமுறை அறைந்ததும் பதிவாகியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த சிசிரிவி வீடியோவில் காட்சிகள் பதிவாகியுள்ளன.

வீடியோவின் நம்பகத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here