கஞ்சா வாங்கியபோது கையும் மெய்யுமாக சிக்கிய பிரபல நடிகை!

போதைப்பொருள் பாவனை விவகாரத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை பிரீத்திகா சவுகான் கைது செய்யப்பட்டுள்ளார்

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக இந்தி நடிகையும் மரணம் அடைந்த சுஷாந்த் சிங் காதலியுமான ரியா சக்கரவர்த்தி கைதானார். ரியாவின் சகோதரர் சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டனர்.

கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரும் கைதாகி உள்ளனர்.

இந்தநிலையில் தற்போது இன்னொரு நடிகையையும் கைது செய்துள்ளனர். அவரது பெயர் பிரீத்திகா சவுகான். இவர் சி.ஐ.டி, தேவோ கே தேவ் மகாதேவ், சாவ்தான் இந்தியா, ஹனுமான் உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார்.

ஒருவரிடம் இருந்து கஞ்சா வாங்கியபோது பிரீத்திகா சவுகானை போலீசார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் அடுத்தடுத்து கைதாவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here