விசா பெறுவதற்காகவே திருமணம் செய்தேன்

இங்கிலாந்து விசா பெறுவதற்காகவே தான் திருமணம் செய்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார்.

இந்தியில் த வெயிட்டிங் ரூம், ஷோர் த சிட்டி, பட்லாபூர், பேட்மேன், அந்தாதுன் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் சொல்லியும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ராதிகா ஆப்தேவும் இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனாவுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த அவர் தற்போது அங்கேயே தங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் ராதிகா ஆப்தே தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் பேசும்போது, “எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. விசா பெறுவது பெரிய பிரச்சினையாக உள்ளது. லண்டனை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விசா எளிதாக பெற்று விடலாம் என்று அறிந்தேன். அதனாலேயே திருமணம் செய்தேன். ஆனாலும் இது நியாயமற்ற செயல்தான்” என்றார். இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here