நடிகை ராஷ்மிக்கு கொரோனா

நடிகை ராஷ்மி கவுதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழில் சாந்தனு, சந்தானம் நடித்த கண்டேன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

இதுதவிர, மாப்பிள்ளை விநாயகர், தவ்லத் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். வெப் தொடரிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் ஜபர்தஷ் என்ற தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் ராஷ்மி கவுதம் பங்கேற்றார். அதே படப்பிடிப்பில் கலந்து கொண்ட சுதீர் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஷ்மி கவுதமும் பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ராஷ்மி கவுதம் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அமிதாப்பச்சன், விஷால், பிருத்விராஜ், அர்ஜுன் கபூர், ஐஸ்வர்யா ராய், தமன்னா, ஜெனிலியா, நிக்கி கல்ராணி, மலைக்கா அரோரா, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கொரோனாவில் சிக்கி மீண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here