கொழும்பு கிங்ஸில் கையெழுத்திட்ட 7 வெளிநாட்டு வீரர்கள்!

லங்கா பிரீமியர் லீக்கில் கொழும்பு கிங்ஸ் அணியில் விளையாடுவதற்கு 7 வெளிநாட்டு வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளின் ஆண்ட்ரூ ரஸ்ஸல், இந்தியாவின் மன்பிரீத் கோனி,
கனடாவின் ரவீந்தர்போல் சிங், ஆப்கானிஸ்தானின் கைஸ் அஹ்மத் மற்றும் கரீம் கான் சாடெக், இங்கிலாந்தின் லாரி எவன்ஸ் மற்றும் டேனியல் பெல்- டிரம்மன் ஆகியோரே கொழும்பு கிங்ஸ் அணியில் ஆட ஒப்பந்தமான வெளிநாட்டு வீரர்களாவர்.

இந்த கோடை பருவகாலத்தில் இங்கிலாந்தின் முதன்மையான உள்நாட்டு டி 20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெல்-டிரம்மண்ட் குவித்துள்ளார். 154.94 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் 423 ரன்கள் எடுத்தார்.

எனினும், கனடாவிவை சேர்ந்த ரவீந்திரபோல் சிங் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் ஹம்பாந்தோட்டையில் அவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில், தொற்று உறுதியானது.

இதேவேளை, கொழும்பு கிங்ஸ் அணியில் ஆடுவதற்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத்தும் நேற்று முன்தினம் கையெழுத்திட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here