25 மாவட்டங்களிலும் 35,000 இற்கும் மேற்பட்டவர்கள் சுயதனிமையில்!

நாட்டில் தற்போது 25 மாவட்டங்களிலும் 35,000 இற்கும் அதிகமானவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய இதனை தெரிவித்தார்.

அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றினால், நாட்டு மக்கள் முக்கியமான சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொரொனா நோயாளிகளால் நாட்டின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கம்பஹா மாவட்டத்தில் வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் அயராது உழைத்து வருவதாக அவர் கூறினார்.

இருப்பினும், வைரஸ் ஆபத்தான விகிதத்தில் பரவுகிறது, குறிப்பாக பேலியகொட மீன் சந்தையைச் சுற்றியுள்ள கொத்தணி வழியாக வைரஸ் பரவி வருகிறது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுகாதார உத்தரவுகளை மக்கள் பின்பற்றத் தவறியதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்று பாலசூரிய கூறினார்.

மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி மூலம் 5,300 க்கும் மேற்பட்டவர்கள் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here