மன்னாருக்கு வந்த கொரோனா நோயாளி பயணித்த பேருந்துகளின் விபரம்… பயணம் செய்தவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்!

கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த ரத்னா ரவல்ஸ் என்ற தனியார் பேரூந்தில் பயணித்த மக்களையும், 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணித்த மக்களையும் உடனடியாக தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு பேலிய கொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில் தப்பி வந்த நபர் ஒருவர் மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த (ரத்னா ரவல்ஸ்) என்ற தனியார் பேரூந்தில் வருகை தந்து 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்தில் பயணத்தை மேற்கொண்டு மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு உரிய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பேரூந்துகளில் பயணித்த மக்கள் உடனடியாக 071-8474361 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தெரியப்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here