8,000ஐ கடந்தது கொரொனா தொற்று!

இலங்கையில் இன்று 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8,000 ஐ கடந்துள்ளது.

இன்று அடையாளம் கணப்பட்டவர்களில் மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புடைய 265 பேரும், தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த 15 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின்  எண்ணிக்கை 8,152 ஆக அதிகரித்துள்ளது. மினுவாங்கொட-பேலியகோடா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,678 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 13 வெளிநாட்டினர் உட்பட 4,203 பேர் 32 கொரோனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 527 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இன்று கொரோனா தொற்றிலிருந்து 130 பேர் குணமடைந்தனர். அதன்படி, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,933 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here