வாழைச்சேனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா!

வாழைக்சேனையில் மேலும் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன்சந்தைக்கு சென்று வந்தவர்கள் என வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்துடன் தொடர்புடையவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 11 பேர் தொற்றிற்குள்ளாகியது நேற்று தெரிய வந்தது.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள், வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் பணியாற்றியவர்களிற்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here