நெடுங்கேணி கொரோனா தொற்றாளர்கள் பயணித்த பேருந்து விபரங்கள்!

வவுனியாவில் இருந்து நெடுங்கேணியூடாக முல்லைத்தீவுக்கு சேவையில் ஈடுபட்ட பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் வவுனியா வடக்கிற்கு பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நெடுங்கேணி பகுதியில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவர்களில் 12 பேருக்கு தொகரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலர் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் வவுனியாவில் இருந்து நெடுங்கேணியூடாக முல்லைத்தீவு செல்லும் பேரூந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

எனவே குறித்த திகதிகளில் காலை 5 மணியில் இருந்து காலை 10 மணிவரையான காலப்பகுதியில் நெடுங்கேணியூடாக முல்லைத்தீவு வழித்தடத்தில் பயணம் மேற்கொண்ட பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உடனடியாக பொதுசுகாதார பரிசோதகர்களை தொடர்புகொண்டு தமக்கான பி.சி.ஆர். பரிசோனைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதுடன் அவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாகுமாறும் கோரியுள்ளனர்.

இதேவேளை குறித்த திகதிகளில் குறித்த நேரத்தில் இப்பேரூந்துகளில் பயணம் செய்த பயணிகளும் தமது பகுதி சுகாதார பரிசோதகர்களை தொடர்புகொண்டு தம்மையும் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளுமாறும் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here