நாடாளுமன்ற கட்டிட தொகுதி மூடப்பட்டது!

கொரோனா அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி மூடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளுமன்ற பாதுகாப்புக்காக சேவையில் அமர்த்தப்பட்ட விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி முற்றாக கிருமிநீக்கம் செய்யப்படவுள்ளது. விசேட அதிரடிப்படையின் வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீண்டும் 28 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

இதேவேளை, கொகுவல, பேலியகொட, வெதமுல்ல பகுதி முகாம்களை சேர்ந்த 9 விசேட அதிரடிப்படையினர் கொரொனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here