கம்பஹாவில் நாளை வர்த்தக நிலையங்கள், வங்கிகள் இயங்கும்!

கம்பஹா மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில்இருக்கும். எனினும், நாளை அங்கு அனைத்து அரச, தனியார் வங்கிகள், வர்த்தக நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் மருந்தகங்களை  காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கி கிளைகளும் நாளை திறக்கப்படும். வங்கிக்கு செல்லும் ஊழியர்கள் தமது வங்கி அடையாள அட்டையை காண்பித்து பயணம் செய்யலாம்.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படாத பகுதிகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தரவு நீக்குவது தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here