ஏ9 வீதியோரம் ரௌடிகள் மறைத்து வைத்திருந்த வாள்கள் மீட்பு… யாரை குறிவைத்தார்கள்?

கிளிநொச்சி பளை முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று
வாள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பளை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி
பகுதியில் இருந்து மேற்படி வாள்கள் மீட்க்பட்டுள்ளதாக பொலிசார்
தெரிவிக்கின்றனர்.

ஏ9 வீதிக்கு அருகாமையில் மின்சார இணைப்புக்களுக்காக அங்கு
அடுக்கப்பட்டிருந்த மின்கம்பங்களுக்கு இடையில் பை ஒன்றில் சுற்றப்பட்ட
நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்க்பட்டுள்ளன.

அவை எதற்காக அங்கு மறைத்து வைக்க்பட்டிருந்தன எனவும் யார் அதனை மறைத்து
வைத்தார்கள் என்பது தொடர்பிலும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை அந்த பகுதியில் அண்மையிலேயே மின் கம்பங்கள்
அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஏதேனும் குற்ற செயலிற்கான திட்டமிடல்கள் இடம்பெற்றிருக்கலாம்
என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here