கொலையாளி துமிந்த சில்வாவை விடுதலை செய்ய ஆளுந்தரப்பு எம்.பிக்கள் மனு!

கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவை விடுவிக்க கோரி அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மனு கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 20ஆம் திகதி அரச தரப்பு நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்த போது, ஆளுந்தரப்பு பிரதம கொறடா அலுவலக உத்தியோகத்தர்கள் இந்த மனுவில் எம்.பிக்களிடம் கையொப்பம் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கினார்.

அரச தலைமையின் ஆசீர்வாதத்துடனேயே இந்த நடவடிக்கை இடம்பெற்றதாக, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து எம்.பிக்களும் மனுவில் கையொப்பிட்டதாகவும், இதன்மூலம் துமிந்தவின் விடுதலையை கோட்டாவிற்கு அவர்கள் இலகுபடுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொலையாளியான பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here