நல்லூர் கந்தனின் மானம்பூ உற்சவம்!

விஜயதசமி நாளான இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் விமர்சையாக இடம்பெற்றது. காலை 6.45 க்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.

தற்காலச் சூழ்நிலைக்கு அமைய ஆலயத்தில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நல்லூரின் பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அமைதியான முறையில் சிறப்பாக மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. பக்தர்கள் சுகாதார இடைவெளிகளை பின்பற்றி இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here