மன்னாரில் இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டி (PHOTOS)

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டி மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் A.K.R & SONS  நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் நேற்று சனிக்கிழமை (24) மாலை 1.30 மணியளவில் மன்னார் முருங்கன் பிச்சைகுளம் இரட்டை மாட்டு வண்டி சவாரித்திடலில் இடம் பெற்றது.

வடமாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 64 சோடி காளைகள் குறித்த போட்டியில் பங்குபற்றின.

A,B,C,D,E ஆகிய 5 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

இதன் போது இப்போட்டியில் A, B ஆகிய இரு பிரிவுகளிலும் மன்னார் மாவட்ட காளைகளும், C பிரிவில் கிளிநொச்சி காளையும், D, E பிரிவுகளில் யாழ்பப்பாணம் காளைகளும் வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற காளைகளுக்கும் உரிமையாளர்களுக்கும் A.K.R & SONS நிறுவனத்தினால் பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here