மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று!

இன்று (24) இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மேலும் 201 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 37 பேரும், நாடு முழுவதுமுள்ள மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 24 பேரும், தொற்றாளர்களுடன் தொடர்புடைய 140 பேரும் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,883 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை  7,354 ஆக உயர்ந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here