முல்லைத்தீவு மையத்தில் 59 பேருக்கு கொரோனா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 68வது படைப்பிரிவின் உடைய திம்பிலி பகுதியில் அமைந்திருக்கின்ற இரானுவ பயிற்சி முகாமில் பேலியகொடை பகுதியிலிருந்து 146 பேர் கொண்டுவந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்

இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் நேற்று (23) இவர்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது

இதன் அடிப்படையில் இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது

இவர்களை கொரோனா சிகிச்சை வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here