உயிரிழந்த கொரோனா நோயாளியின் உடல் அடக்கம்!

கொரோனா தொற்றினால் இன்று உயிரிழந்தவரின் உடல், தனிமைப்படுத்தல் விதிமுறைகளிற்கு அமைய குளியாபிட்டி பொது மயானத்தில் நடந்தது.

இறுதிச் சடங்குகள் பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்டன.

இன்று காலை குளியாபிட்டி தள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

குளியாபிட்டியில் வசிக்கும் 56 வயதான ஒருவரே உயிரிழந்தார். அவர் இருதய மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு ஒக்ரோபர் 14 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நோயாளி பின்னர் இரண்டு நோய்களினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

உயிரிழந்த பின்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here