துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மாத்தளை இளைஞனிற்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

16 வயதிற்கும் குறைந்த சிறுவனை சட்டபூர்வ பாதுகாவலரிடமிருந்து கடத்தி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் அபராதத்துடன், 9 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மத்திய மாகாண மாத்தiள மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர 22 ஆம் திகதி இந்த உத்தரவிட்டார்.

மாத்தளை, குரிவெலவை சேர்ந்த முகமது நாசர் அப்துல் ரஹ்மன் (22) என்பவருக்கே தண்டனை வழங்கப்பட்டது.

குரிவெலவை சேர்ந்த சிறுவனிற்கு ரொபி, சொக்லேட் கொடுத்து ஏமாற்றி அழைத்து சென்று துஷ்பிரயோம் செய்திருந்தார்.

2017 ஆம் ஆண்டில் மாத்தளை பொலிஸ் தலைமையக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

16 வயதிற்கு குறைந்த சிறுவனை கடுமையான துஷ்பிரயோகம் செய்ததாக, சந்தேகநபருக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

தனது பாதுகாவலில் இருந்தபோது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததற்காக பிரதிவாதிக்கு எதிரான முதல் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மோசமான சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு தலா ரூ .10,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறின் மேலும் ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ .50 ஆயிரம் செலுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here