பொடி லெசிக்கு சொந்தமான ஆயுதங்களாம்!

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் கும்பலின் உறுப்பினரான பொடி லெசிக்கு சொந்தமான ரி-56 துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் எனடபன நேற்று இரவு (23) மிட்டியாகொட காவல் பிரிவில் உள்ள தெல்வட்ட பகுதியில் உள்ள பொடி லெசியின் பாட்டி வீட்டின் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டதாக சிஐடி கூறுகிறது.

தற்போது சிஐடியின் காவலில் இருக்கும் பொடி லெசியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிஐடி கூறியது. பொடி லெசியையும் சிஐடி அதிகாரிகளால் இந்த இடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

சிஐடி உதவி காவல் கண்காணிப்பாளர் மெரில் ரஞ்சன் லமஹேவ உள்ளிட்ட அதிகாரிகள் குழு புதிய சிஐடி எஸ்எஸ்பி இயக்குனர் நிஷாந்த டி சொய்சாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆயுதங்களை கண்டுபிடித்தது.

இதற்கிடையில், பொலிசாரின் கட்டுப்பாட்டில் உள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர்கள், “தப்பியோட முயன்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்கள்“ என பொலிசார் வரிசையாக கூறி வரும் சம்பவங்களிற்கிடையில், தனது உயரச்சுறுத்தல் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here