யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கிளினிக்குகள் இனி புதிய இடத்தில

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் இனிமேல் புதிய இடத்தில் இயங்கும் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

விக்டோரியா வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய கட்டடத் தொகுதியில் மருத்துவ கிளினிக் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் நடைபெறும்.

ஏனைய கிளினிக்குகள் அனைத்தும் பழைய இடங்களிலேயே இயங்கும்.

மருத்துவ கிளினிக்குக்கு வரும் பொதுமக்கள் நேரடியாக விக்டோரியா வீதியினூடாக வைத்தியசாலைக்கு எதிர்ப்புறமாக இருக்கின்ற கட்டிட தொகுதிக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here