மஸ்கெலியவில் இளைஞனுக்கு கொரோனா!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான லெமன் மோரா தோட்டத்தில் உள்ள 2 இளைஞர்கள் கொழும்பு மெனிங் சந்தையில் சிறு வியாபாரம் மேற்கொண்டு வந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள இளைஞர் மட்டகளப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இளைஞருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சுகாதாரத்துறையினர் மஸ்கெலியா லெமன் மோரா தோட்டத்திற்கு சென்று அங்குள்ள மக்களுக்கு கொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் கொழும்பில் கொவிட்-19க்காக மூடப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருவோர் தங்களது பெயர்களை அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திலும், சுகாதார பிரிவிலும், கிராம சேவகர் பிரிவிலும் பதிவு செய்வதன் மூலம் மலையகத்தில் இந்த நோய் பரவாது தடுக்க முடியும் என சுகாதார உயர் அதிகாரி தெரிவித்தார்.

குறித்த சுகாதர அதிகாரி மேலும் கூறுகையில், கொரோனா முதல் அலையின் போது மலையகத்தில் இவ்வாறான நிலை தோன்றவில்லை. இம்முறை சமூகப்பரவல் என்பதால் அதிகளவு இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் வெளியிடங்களில் இருந்து வருவோர்களிடம் சுகாதார முறைப்படி நடந்துக் கொள்ளுமாறும். முகக்கவசம் அணியுமாறும், சவரக்காரம் கொண்டு கை கழுவுதல் ஆகிய முக்கிய அறிவிறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும், அரசின் கட்டளைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here