தாவியவர்களை தவிர்த்து விட முடிவு!

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் எட்டு உறுப்பினர்களையும் கூட்டணியிலிருந்து விலக்கி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (23)  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணையை நடத்துவதற்கும், அவர்களை எதிர்க்கட்சி குழுவிலிருந்து நீக்கி, அவர்களுக்கு பாராளுமன்றத்தில் தனி இடங்களை வழங்கவும் நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸா அத்தநாயக்க தெரிவித்தார்.

கட்சி குழு நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு குழு அறையில் நேற்று மதியம் 2.00 மணிக்கு சந்தித்து மாலை 5.00 மணி வரை fலந்துரையாடியது.

ஐக்கிய மக்கள் சக்தியில் டயானா கமகே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நசீர் அஹமட், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், முஸ்லிம் தேசிய முன்னணியின் AASM ரஹீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏ.அரவிந்தகுமார், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இசக் ரஹ்மான் ஆகியோர் ஆதரித்து வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்திய டயானா கமகே மீது தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், பங்காளிகளான மனோ கணேசன், ரிசாத், ஹக்கீம் ஆகியோர் தம்முடனிருந்து வேலி பாய்ந்த உறுப்பினர்கள் மீது நடவடிக்கையெடுக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 23 பேர் கையெழுத்திட்ட கடிதம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாராவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here