ஊரடங்கு உத்தரவுள்ள பிரதேசங்களிலிருந்து இரகசியமாக யாழ் வருபவர்களால் ஆபத்து!

கொரோனா அபாயம் அதிகரித்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறிய பலர் அண்மை நாட்களாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் பல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து தடமறியவும், மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் புதிய தொற்றுக்களை குறைக்கவும் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த பலர், ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்ட பின்னர் தமது சொந்த பிரதேசங்களிற்கு இரகசியமாக திரும்பியுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணத்திற்கும் பலர் திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் லொக் டவுன் செய்யப்பட்டிருந்த போது கூட, கொழும்பிலிருந்து சிலர் யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார்கள். தற்போது குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளில்தான் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், அபாய வலயங்களிலிருந்து வருபவர்களை தடுப்பது சாத்தியமற்றது.

எனினும், அபாய வலயங்களிலிருந்து திரும்புபவர்களை கையாள பொறிமுறையொன்று அவசியமென வடக்கு சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here