பழிச்சொல்லாலா?… பயத்தாலா?: குடிநீர்த்தாங்கியில் மீட்கப்பட்ட சடலம்!

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதிக்கான நீர்விநியோகிக்கும் தாங்கியிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. வட்டுக்கோட்டை, சங்கரத்தை பகுதியை சேர்ந்த திவாகரன் (47) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.

கட்டிட தொழிலாளியான இவர், குடத்தனையில் தங்கியிருந்து குடிநீர்த்தாங்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சில தினங்களின் முன்னர் தனது வீட்டிற்கு சென்று திரும்பி வந்துள்ளார்.

இதேகாலப்பகுதியில் குடிநீர் தாங்கி நிர்மாணப்பணியுடன் தொடர்புடைய பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளன. இது தொடர்பில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையையடுத்து, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அவர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என்றும், திருட்டுடன் தான் தொடர்புபடவில்லையென்றும், பொலிசார் தம்மை கடுமையாக அச்சுறுத்தினர் என்றும் உயிரிழக்க முன்னர் அவர் தனது உறவினருக்கு தொலைபேசியில் தெரிவித்ததாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here