அட்டன் நகரில் ஐந்து மீன் கடைகளுக்கு பூட்டு, 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அட்டன் நகரில் இயங்கி வந்து ஐந்து மீன் கடைகள் அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவரின் அறிவுறுத்தல்களுக்கமைய இன்று (23) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

அட்டன் பிரதான மீன் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இருவர் கொழும்பு பேலியகொட மொத்த மீன் விற்பனை நிலையத்தில் மீன் கொள்வனவு செய்து வந்துள்ளதனை தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்பு கருதி இந்த கடைகள் மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு சென்று வந்த இருவரை கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பதாகவே தனிமைப்படுத்தப்பட்டதாகவும், ஏனைய மீன் கடைகளில் பணிபுரியும் 12 பேர் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கொழும்பு சென்று வந்த இருவருக்கு இன்று (23) திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை வந்த பின் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here