கரைச்சி பிரதேசசபை தீயணைப்பு சேவைகள் மீள ஆரம்பம்!

கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் பணிகள் மீள ஆரம்பமாகியுள்ளது என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவிற்கு ஊழியர்கள் நியமிக்கப்படாமை மற்றும் தற்போதுள்ள பதில் ஊழியர்களுக்கீ மேலதிக கொடுப்பனவுகளை வழங்க உள்ளுராட்சி உதவி ஆணையாளர் இழுத்தடிப்பு செய்தமை போன்றவற்றால் நேற்று தீயணைப்பு சேவைகள் அனைத்தையும் நிறுத்தி இருந்தது.

இன்றைய தினம் உள்ளூராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளான உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரதேச சபையின் செயலாளர் பொறுப்பதிகாரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து குறித்த இடர்களை நீக்கி தீர்வினை கண்டுள்ளமை காரணமாக தீயணைப்பு சேவைகள் மீள இயங்க ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

தற்போது சேவைகளுக்காக வழமையான தீயணைப்பு இலக்கமான 0212283333 எனும் இலக்கத்துடன் தொடர்பினை மேற்கொள்ளலாம் எனவும் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here