அரந்தலாவ படுகொலை பற்றிய குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு!

அரந்தலாவ படுகொலையில் பாதிக்கப்பட்ட பௌத்த பிக்கு மேற்கொண்டுள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தாக்குதலில் பலியானவர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் அறிக்கை பதிவு செய்து, குற்றவியல் விசாரணையை ஆரம்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டு வாரங்களில் முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறையின் அரந்தலாவ பகுதியில் 1987 ஜூன் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 33 பௌத்த பிக்குகள், 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாகவும், அப்போது கருணா அந்த பகுதிக்கு பொறுப்பாக இருந்ததாகவும் பௌத்த பிக்குகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here