இளம் யுவதியை கடத்தி பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட முயன்ற தமிழ் இளைஞன் கைது: கனடாவில் சம்பவம்!

பெண் ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட நிர்பந்தித்த தமிழர் ஒருவர் கனடாவின் டர்ஹாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது மனிதக்கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மிசிசாகா (Mississauga) நகரைச் சேர்ந்த நிதர்ஷன் எலன்சூரியநாதன் (30) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதான பெண் ஒருவர் 911 அவசர இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றனர்.

சம்பவ இடத்தில் நிதர்ஷன் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல், மூச்சுத் திணறலுடன் பாலியல் தாக்குதல், பலவந்தமாக பாலியல் சேவைகளைப் பெறுதல்,
விளம்பர பாலியல் சேவைகள், பாலியல் சேவைகளிலிருந்து பொருள் நன்மை,
கடத்தல் நபரிடமிருந்து பொருள் நன்மை பெறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், இவரினால் வேறு பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கவலை வெளியிட்டனர்.

நிதர்ஷன் எலன்சூரியநாதன் முன்னரும் காவல்துறையினரால் வேறு குற்றச் சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர். 2016ஆம் ஆண்டு ரொரன்டோ காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டவர். மேலும் இரண்டு தமிழர்களுடன் இணைந்து 2015ஆம் ஆண்டில் ஸ்காபரோவில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here