தப்பியோடிய கொரோனா நோயாளி கைது!

இன்று காலை 6 மணியளவில் கொஸ்கம மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பகுதியில் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொரளை சஹாஸ்புர வீட்டுத் திட்டத்தின் 13 வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் அவர் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட நபர் உடல்நிலை குணமடைந்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here