சமூக சேவையாளர் கு.கிருபைராஜா காலமானார்

புகையிரத திணைக்கள கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா காலமானார்.

களுவாஞ்சிகுடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் களுவாஞ்சிகுடி அபிவிருத்திச்சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம்,மெதடிஸ்த திருச்சபை போன்றவற்றில் செயலாளராகவும் களுவாஞ்சிகுடி முன்னணி விளையாட்டுக் கழகமாக இருந்த சிவப்பு நாடா விளையாட்டு கழகத்தின் ஸ்தாபக தலைவராகவும் இருந்து சமூகத்திற்கு பெரும்பணியாற்றியுள்ளார்.

அதுமாத்திரமின்றி அவரது உத்தியோகத்தினை கறைபடியாத கரங்கொண்டு நேர்மையாக மேற்கொண்டு அனைத்து உத்தியோகத்தருக்கும் வழிகாட்டியாக இருந்தவர். சகதொழிலாளர்களுக்கு அநிதி இளைக்கப்படுகின்றபோது அவர்கள் நலன்சார்ந்து குரல் கொடுக்கின்ற தொழில் சங்கவாதியாகவும் திகழ்தவர்.

அது மாத்திரமின்றி பல்வகை ஆளுமையாக திகழ்ந்த இவர் களுவாஞ்சிகுடியில் ஆரம்பகாலத்தில் பிரத்தியேகமாக ஆங்கில கல்வியை புகட்டுவதனூடாக பெரும்பணியாற்றியவர். இவரின் இழப்பானது களுவாஞ்சிகுடி மண்ணுக்கு பாரிய இழப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here