வாகனேரி நீர்ப்பாசன சர்ச்சை குறித்து விளக்கம்!

நீர்பாசன திணைக்களத்தின் நடவடிக்கையினால் பாதிக்கப்படும் கிரான் விவசாயிகள் என்ற தலைப்பில் சமூக வலைத்தளமொன்றில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று ஓட்டமாவடியிலுள்ள வாகனேரி நீர்பாசன திட்டக் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

வாகனேரி நீர்பாசன திட்ட முகாமைத்துவ குழுத் தலைவர் சி.புஸ்பாகரன் தலைமயில் இவ் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பின்வருமாறு ஊடகங்களுக்கு தமது கருத்துக்களை தெரிவித்தனர்,

வாகனேரி குளத்தில் நீர் இருக்கும்போது அதனை விநியோகிக்க வேண்டியது நீர்பாசன திணைக்களத்தினுடைய கடமையாகும். அதனை ஏன் விநியோகிக்கவில்லையென்பது பற்றி நாம் அறிய வேண்டும்.

இத்திட்டத்தில் 15000 ஆயிரம் ஏக்கருக்கு நீர்பாசனம் வழங்குவது என்று வெளிவந்த செய்தியானது தவறானதாகும். 2020, 2021 ஆண்டிற்கான பெரும்போகச் செய்கைக்காக தீர்மானிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்hனது 9587 ஏக்கராகும்.
நீர்பாசனத்தின் மூலம் 7494 ஏக்கரும் மானாவரி மூலமாக 2093 ஏக்கரும் உப உணவு பயிர் செய்கைக்காக 239 ஏக்கரிலும் பயிர் செய்கைப் பண்ணப்பட தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையிலான ஆரம்ப கூட்ட திர்மானத்தின்படியும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நீர்வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை வாகநேரி திட்டத்தின் கீழ் உள்ள இரண்டு பெரிய அணைக்கட்டுக்களான பண்டாரக் கட்டு மற்றும் தவனைக்கட்டு என்னும் 2 அணைக்கட்டுக்களின் திருத்த வேலைகள் உலக வங்கியின் நிதியினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிதியானது எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முடிவில் முடிவுறுத்தப்படவுள்ளது. அதற்கு முன்பு குறித்த வேலைத்திட்டத்தினை சரிவர முடிக்க வேண்டியுள்ளமை நீர்பாசன திணைக்களத்தினுடைய கடமையாகும். இக்கட்டுக்கள் இரண்டும் திருத்தம் செய்வதன் மூலமே சீரானமுறையில் நீர்வழங்கலை மேற்கொள்முடியும். எனவே இத்திட்டம் முடிவு பெற்றால் அதன் மூலம் குறித்த 7494 ஏக்கர் விவசாயத்திற்கும் சிறுபோகத்தில் சரியாக நீர் வழங்க முடியும்.

அதற்கான வேலை முடிவுற மேலும் 10 நாட்கள் கால தேவை ஏற்பட்டது. குறித்த திருத்தவேலை முடிவடையாத பட்சத்தில் நீர் வழங்களில் தடை ஏற்பட்டது.
இதனால் நீர்விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டது. 10 நாட்கள் மேலும் தேவையென்பதை விவசாய கண்டத்திற்குரிய தலைவர்களுடைய அனுமதி பெற்ற பின்னரே இச் செயற்பாடு முன்னெடுக்க்பட்டு நீர் விநியோகம் வழங்கப்பட்டது. தற்போது கண்டங்களுக்குரிய நீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை 10 ஆம் திகதி வழங்கப்படவேண்டிய நீர் 20 ஆம் திகதி வழங்கப்பட்டாலும் முன்பு போல் உரிய வேளைக்கு வயல்களுக்கு நீர் சென்று சேரவில்லை என்பதும் ஒரு கவலை தரும் விடயமாகும். இதற்கான காரணம் நீர் வழிந்தோடும் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு நடவடிக்கையாகும்.

எனவே நீர்பாசன திணைக்களம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை மற்றும் வரட்சி போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு பாராமுகமின்றி நீரினை சேமித்து வைத்திருந்தமையினால் இம்முறை விவசாயிகள் தமது நீர்தட்டுப்பாட்டில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்னர்.எனவே விவசாயிகள் தங்களது இவ்வாறான விடயங்களை விவசாய திட்டமிடல் பிரிவுடன் தொடர்பு கொண்டு செயற்படுவது நல்லதாகும்.

விவசாயிகளும் அதிகாரிகளுக்குமிடையில் முரண்பாட்டு நிலையினை தோற்றுவிக்கும் முறையில் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடுவது ஒரு கவலை தரும் விடயம். எதிர்காலத்தில் இவ்வாறதொரு சம்பவங்கள் இடம்பெறாமல் வழியமைக்க வேண்டும் என இதன்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தின் வாகநேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்படும் விவசாயத்திற்கான நீர் வழங்கள் வினியோத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் விவசாயிகள் தமது விவசாய நிலங்களுக்கு நீரின்றி பெரும்போக விவசாய செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சமூகவலைத்தளமொன்றில் அன்மையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here