கோட்டாவை சந்தித்த கூட்டமைப்பு எம்.பி: படம் கசிந்ததையடுத்து புது விளக்கம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், நேற்று ஜனதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் இந் சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பு புகைப்படங்கள்வெளியானதையடுத்து, மட்டக்களப்பு காணி விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேசியதாக சாணக்கியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், வட கிழக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எல்லைப்புற காணிகள்
பகிர்ந்தளிக்கப்படுவது மற்றும் மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள
மேய்ச்சல் நிலம் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது எனவும், அத்துமீறிய சிங்கள குடியேற்றம், கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் காரணமாக தனது சிறப்புரிமை மீறப்பட்ட விவகாரம், தொடர்பாகவும் பேசப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here