பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 10 பேருக்கு கொரோனா!

பேருவளை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 100 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று இரவு 16 பேரின் முடிவுகள் வெளிவந்த நிலையில் அவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீன் லொறி சாரதிகள், அவர்களின் உதவியாளர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதையடுத்து இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பேருவளை மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here