நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

இலங்கையில் நேற்று கொரோனா தொற்றுடன் 309 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில் 188 பேர், பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள்.

பேலியகொட மீன் சந்தையில் இருந்து பதிவான 188 தொற்றாளர்களில், 79 பேர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள், 53 பேர் களனிய பகுதியைச் சேர்ந்தவர்,
09 பேர் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள், 06 பேர் கடுவெல பகுதியைச் சேர்ந்தவர்கள், 15 பேர் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர்கள், 07 பேர் கடவத்த பகுதியைச் சேர்ந்தவர்கள், 03 பேர் கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்தவர்கள், 03 பேர்
மொரட்டுவ பகுதியை பகுதியைச் சேர்ந்தவர்கள், 04 பேர்
கொட்டஹேன பகுதியை பகுதியைச் சேர்ந்தவர்கள், 09 பேர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

மேலும், கொழும்பு பகுதியில் இருந்து 31 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 14 பேர் கொழும்பிலிருந்து, 07 பேர் கொட்டஹேனவிலிருந்து, 04 பேர் முல்லேரியாவிலிருந்து, 04 பேர் கிராண்ட்பாஸிலிருந்து, புளூமெண்டல் மற்றும் தெஹிவளையிலிருந்து தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும், கம்பாஹா மாவட்டத்தில் இருந்து 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 08 பேர் வத்தளை, 14 பேர் மினுவாங்கொட, 05 பேர் திவுலபிட்டி, 10 பேர் கட்டுநாயக்க, ராகம ஒருவர்.

காலி மாவட்டத்தில் 09, மாத்தறை மாவட்டத்தில் 01, குருநாகல் மாவட்டத்தில் 14, அனுராதபுரம் மாவட்டத்தில் 02 மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 24 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here