கோட்டாவை நம்புகிறேன்: பல்டியடித்த டயானா!

மனச்சாட்சியின் அடிப்படையிலேயே 20வது திருத்தத்தை ஆதரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார். எந்த சலுகையையும் எதிர்பார்த்து அரசாங்கத்தை ஆதரிக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

20வது திருத்த வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்ற போது, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பி, டயானா கமகே திடீரென ஆதரித்து வாக்களித்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, ஜனாதிபதி தேர்தல்களிற்கு கணிசமான பொதுநிதி செலவிடப்படுகிறது. ஆனால் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தற்போது வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டை திறம்பட நிர்வகிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ நாட்டை அபிவிருத்தி செய்வார் என நம்புவதாக டயானா கமகே தெரிவித்தார்.

நாட்டை திறம்பட நிர்வகிப்பவரை கட்சி பேதமின்றி ஆதரிக்க வேண்டும், யாருடைய கைப்பாவையாகவும் நான் செயற்பட மாட்டேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here