20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

அரசியலமைப்பின் 20 திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20வது திருத்தத்தின் இறுதி வாக்கெடுப்பில் 156 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர். 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

இலங்கை சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உருமயா உள்ளிட்ட ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனவின் அனைத்து பங்காளிக்கட்சிகளும் இந்த வரைபுக்கு ஆதரவாக வாக்களித்தன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய வாக்களிப்பின் போது சமூகமளித்திருக்கவில்லை.

பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டயானா கமகே, எம்.எஸ்.தௌபீக், மொஹமட் ஹரீஸ், இஷாக் ரஹ்மான், அரவிந்த்குமார், பைசர் காசிம், நசீர் அகமது மற்றும் ஏ.எஸ்.ரஹீம் ஆகியோர் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மீதமுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகியவை 20 வது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தன.

வரைவின் மூன்றாவது வாசிப்பின் போது பல திருத்தங்களை நீதி அமைச்சர் அலி சப்ரி தாக்கல் செய்தார்.

பல அரசு மற்றும் எதிர்க்கட்சி தலைமை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவும் குழு கட்டத்தில் முன்மொழியப்பட்ட வரைபில் மாற்றங்களைச் சமர்ப்பித்தனர்.

இதற்கிடையில், 20 வது திருத்தத்தில் 17வது பிரிவான இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற அங்கத்துவத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பை கோரினர்.

இரட்டை குடியுரிமை விவகாரத்தில் ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் பதிவாகின.

இதன்படி, மூன்றாவது வாசிப்பு திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டது.

156 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

20வது திருத்த வரைவை நீதியமைச்சர் கடந்த செப்ரெம்பர் 22 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து 39 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் வரைவு மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மற்றும் இன்று இரண்டு நாட்களில் விவாதித்ததை அடுத்து இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அரசியலமைப்பைத் திருத்துவதற்கான “அரசியலமைப்பின் இருபதாம் திருத்தம்” என்ற மசோதாவை நீதி அமைச்சர் செப்டம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 20 வது திருத்தத்தின் அரசியலமைப்பை எதிர்த்து 39 சிறப்பு தீர்மான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 வது திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு தீர்மான மனுக்கள் தொடர்பான சமர்ப்பிப்புகளை உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்கள் பரிசீலித்தது. அதன்படி 4 உப பிரிவுகளை தவிர்ந்த ஏனையவை நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாமென தீர்ப்பளித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here