பேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய மூத்த போராளிகளில் ஒருவரான கிருஸ்ணா இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பில் அங்கம் வகித்த கிருஸ்ணா, 1984இல் பேதுருதாலகால மலையில் இருந்த ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்களில் முதன்மையானவர்.

80களின் ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கத்தில் இணைத்துக்கொண்ட அவர் ஒரு தோட்டத்தின் தொழிற்சாலை மேலாளராக கடமையாற்றியவர்.

ஈரோஸின் மத்திய குழுவில் உறுப்பினராக செயற்பட்டவர்.

பல வருடங்கள் போகம்பரை சிறையிலும் வெலிக்கடை சிறையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் விடுதலையான பின்னரும் தனது செயற்பாட்டை விட்டு ஒதுங்கவில்லை. தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் தலைமையில் நான்கு இயக்கங்கள் கூட்டு சேர்ந்தபோதும் பின்னர் இந்திய அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுக்களிலும் மலையகம் சார்பாக கலந்து கொண்டவர்.

EROS இயக்கம் தனது செயற்பாட்டை நிறுத்திய பின்னர் மிகவும் வறுமையில் தனது இறுதி காலங்களில் இருந்தார். அவரது இறுதிகாலங்கள் பல நோய்களுக்கு ஆட்பட்டு இருந்தார். மலையக வரலாற்றில் போராடப்புறப்பட்ட போராளிகளின் ஒரு முன்னோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here