முகப்பூச்சுக்கள் பற்றி யாழ், சாவகச்சேரி வர்த்தக நிலையங்களில் தெளிவூட்டல்!

யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு

யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண மற்றும் சாவகச்சேரி பகுதியில் 87 வர்த்தக நிலையங்களிற்கு விசேட விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக இறக்குமதி விபரமில்லாத முகப் பூச்சுக்களை (Cream) விற்பனை செய்வதனை தடை செய்யும் நோக்கில் வர்த்தக நிலையங்களிற்கு விஷேட விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரியும் வட மாகாண பதில் உதவிப் பணிப்பாளருமாகிய அப்துல் ஜஃபர் ஸாதிக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் வர்த்தக சங்க உறுப்பினர்களிற்கும் இவ் விஷேட விழிப்புணர்வு செயற்பாடுகள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here