வேலணையில் மரநடுகை!

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் மரநடுகைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. வேலணை பிரதேச செயலர் சோதிநாதன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இதில், விவசாய பாட இணைப்பாளர் குற்றாலம் இளங்குமரனின் வழிகாட்டலில் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் உருவாக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட மலைவேம்பு மரங்கள் அல்லைப்பிட்டி வீதியோரங்களில் நாட்டப்பட்டன.

அத்துடன், கிராம அலுவலர் குலசிங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட சவுக்கு மரங்கள் தீவக கடற்கரை ஓரங்களிலும் நாட்டி வைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here