நாளை ஆசிரியர் நியமன கடிதம் சிலருக்கே: ஏனையவர்களிற்கு தபாலில்!

ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் நியமனங்கள் சிலருக்கு மாத்திரமே அங்கே வழங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஒன்று கூடல்களை தவிர்க்கும் அரசாங்கத்தின் கட்டளைக்கேற்ப ஏனையோருக்கான நியமன கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் தனது ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்து சான்றிதழ்களை பெற்று தனது கோவைகளை பூர்த்தி செய்த 435 ஆசிரியர் உதவியாளர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (23) வெள்ளிக்கிழமை கண்டி ஆளுனர் மாளிகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெறும்.

இதன்போது அழைப்பிதல் கடிதங்கள் அனுப்பட்டுள்ள சிலருக்கே இந்நியமனங்கள் அங்கே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஒன்று கூடல்களை தவிர்க்கும் அரசாங்கத்தின் கட்டளைக்கேற்ப ஏனையோருக்கான நியமன கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன என்றார்.

-தலவாக்கலை பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here